ஸ்ரீவில்லிபுத்தூரில் தைப்பொங்கல் விழா: கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2022 10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டாள், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி, பெரிய மாரியம்மன் கோயில்கள் அடைக்கப்பட்டதால் பக்தர்கள் கோயில்களுக்குள் செல்ல முடியாமல் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனோ தட்டுபாடு காரணமாக நேற்று முதல் ஜனவரி 18 வரை கோயில்களில் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருடந்தோறும் தை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆண்டாள், வைத்தியநாத சுவாமி, பெரிய மாரியம்மன் கோயில்களில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பஸ்களும் குறைந்த அளவு இயங்கியதால் வெளியூர் பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் நகரில் பால்கோவா விற்பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நகரில் மாரியம்மன் கோவில் கிழக்கு மற்றும் மேற்கு தெருக்கள் உட்பட பல்வேறு தெருக்களிலும், தெரு கோயில்களிலும் அப்பகுதி பொதுமக்கள் பொங்கல் வைத்தும் சாமி தரிசனம் செய்தனர்.