நெய்க்காரப்பட்டி: பழநி, பெரிய கலையபுத்தூரில் உள்ள திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது கோயிலில் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது. பழநி, நெய்க்காரப்பட்டி அருகே பெரிய கலையம்புத்தூரில் வள்ளுவர் வீதியில் கடந்த 54 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இங்கு திருவள்ளுவர் கோயில் கட்டப்பட்டு 16 வருடங்கள் ஆன நிலையில் ஊர் மக்கள் சார்பில் அவரது தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளுவர் கோயில் அவரது சிலைக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் திருவள்ளுவரை வழிபட்டனர். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் மாநில திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்றது.