சிவனை அபிஷேகப்பிரியர் என்பர். ருத்ர சமகம் என்ற மந்திரம் ஜெபித்து பசுவின் கொம்பு வழியாக சிவனுக்கு பாலபிஷேகம் செய்வது புனிதமானதாகும். பால் மட்டுமில்லாமல் பஞ்சகவ்யம் என்னும் பால், தயிர், நெய், கோமியம் (பசு மூத்திரம்), கோமயம்(சாணம்) ஆகிய ஐந்தையும் கொம்பு மூலமாக சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதைப்பார்த்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும்.