பதிவு செய்த நாள்
17
ஜன
2022
05:01
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட குமணன்தொழு மலை அடிவாரத்தில் சிவ பக்தர்கள் சார்பில் பௌர்ணமி பூஜை நடந்தது. இயற்கை வளம் பெருகவும், தமிழக மக்கள் நலம் பெற வேண்டியும் நடந்த பூஜையில் ராமேஸ்வரம் சிவனடியார் ஸ்ரீ அகோர சிவம் கணேச சுவாமி தலைமை வகித்தார். விடிய விடிய நடந்த பூஜையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. குமணன் தொழு, வேம்பூர், வருஷநாடு, கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி, பொன்னம்படுகை கிராமங்களைச் சேர்ந்த சிவபக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். மலை கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குமணன்தொழு ஊராட்சி தலைவர் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரேம்ஆனந்த், ஊர் பிரமுகர்கள் ஜெயராம், தினகரன், செல்லதுரை, சுரேஷ், ரமேஷ், ஆசை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.