கடலுார : கடலுார் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதால், தேவநாத சுவாமி கோவில் உள்ளேயே மஞ்சு விரட்டு நடந்தது. கடலுார், திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலையொட்டி தேவநாத சுவாமி வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மஞ்சு விரட்டு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்படும். இந்தாண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், கோவில் நுாற்றுகால் மண்டபம் முன்பு மாலை உற்சவர் தேவநாத சுவாமியை எழுந்தருளச் செய்து, தீபாராதனை நடந்தது. கோ-சாலையில் உள்ள பசுக்களை கொண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது.