ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், தைப்பூசம் வரையில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வருகை அதிகமிருக்கும். இந்நிலையில், கோவில் நிர்வாகத்தின் அறிக்கை:கொரோனா தொற்று பரவலின் காரணமாக, 18ம் தேதி தைப்பூசம் வரையில், கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவில் பணியாளர்களை வைத்து பூஜைகள் மட்டும் நடக்கும். தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பக்தர்கள் கோவில் வளாகத்துக்கு வெளியில் கூட்டமாக நின்றும், தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.