பதிவு செய்த நாள்
23
ஜன
2022
11:01
பொங்கலூர்: அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹுதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியன நடந்தது.
நேற்று சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8:45 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு ஆகியன நடைபெற்றது. 9:30 மணிக்கு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி மூலாலயம் மகா கும்பாபிஷேகம், உடன் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை, 5:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், புதிய தேர் பவனி வருதல் மற்றும் தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடக்கிறது. கும்பாபிஷேகத்தை ராஜா பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கிறார்கள். இன்று ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேக விழா நடக்கிறது.