திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2022 16:57
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது.
கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு நேற்று (ஜன.27) முதல் பிப்.15 வரை திருவிழா நடக்கிறது.கொரோனா காரணமாக முக்கிய நிகழ்ச்சிகள் பக்தர்களின்றி நடைபெறும் என அறிவித்தனர். நேற்று பூத்தமலர் பூ அலங்காரத்தை முன்னிட்டு கோயில் வளாகம் வண்ணக் கோலப்பொடி, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இன்று திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது. பிப்.1 ம் தேதி கொடியேற்றம், பிப்.12 ம் தேதி தசாவதாரம், பிப்.13 ல் கொடியிறக்கம், பிப்.14 ல் ஊஞ்சல், பிப்.15 ல் தெப்ப உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும்.கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து நேற்று இரவு வரை குழப்பமே நிலவியது. அதேசமயம்பூக்குழி இறங்குதல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.