பதிவு செய்த நாள்
28
ஜன
2022
05:01
புதுச்சேரி: கதிர்காமம், சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது.கதிர்காமம், புதுத்தெருவில் உள்ள சக்தி விநாயகர் கோவில், புதுப்பிக்கப்பட்டது. அதனையொட்டி வரும் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. அன்று, இரவு முதல்கால யாக பூஜை், மறுநாள் 5ம் தேதி, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.6ம் தேதி காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 9:45 மணிக்கு கோபுர கலசத்திற்கும், 10:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.