திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு விரைவில் நேரடியாக தரிசன டோக்கன்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2022 03:01
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, விரைவில் நேரடியாக தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நேற்று பிப்ரவரி மாதத்திற்கான சர்வ தரிசன இலவச டோக்கன்களுக்கான முன்பதிவு வெளியிடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், விரைவில் நேரடியாக சர்வ தரிசன டோக்கன்கள் வெளியிட தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. தற்போது பிப்.,15ம் தேதி வரைக்கான டோக்கன்கள் மட்டுமே நேற்று ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இவை கிராமப்புறங்களில் உள்ள சாதாரண பக்தர்களுக்கு கிடைக்க வில்லை என தேவஸ்தானம் கருதுகிறது. எனவேதான் பிப்ரவரி 15க்குப் பின் ஒமைக்ரான் தொற்று பரவலின் தீவிரம் குறையும் என கருதி, டோக்கன்கள் நேரடியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.