பதிவு செய்த நாள்
02
பிப்
2022
03:02
மணப்பாக்கம் : மணப்பாக்கம், வெள்ளீஸ்வரர் கோவில் இடத்தில் சுவாமி சிலையினை வைத்து ஆக்கிரமித்த இடம் மீட்கப்பட்டது.
சென்னை, மணப்பாக்கம் வெள்ளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, புல எண், 406 ல், 3.24 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதி இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், மணி என்பவர், முனீஸ்வரர் சிலையினை பிரதிஷ்டை செய்திருந்தார்.இது தொடர்பாக அறநிலையத்துறை இணைக் கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த டிச., 31ம் தேதி அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த முனீஸ்வரர் சிலை, குதிரை வாகனம், சூலம் ஆகியவற்றை, காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவிக் கமிஷனர் முன்னிலையில், ஆலந்துார் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அகற்றினர். அவை, கோவூர் சுந்தரேஸ்வரர் கோவில் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.