மாயஜாலம் செய்வதில் வல்லவர் என்பதால் விஷ்ணுவுக்கு ‘மகாமாயன்’ என்று பெயர். தொல்காப்பியம் இவரை ‘மாயோன்’ என குறிப்பிடுகிறது. இவர் செய்வதிலேயே பெரிய வேடிக்கை துாங்கிக் கொண்டே பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்வது தான். ஆதிசேஷன் என்னும் பாம்பு படுக்கையில் துயிலும் இவரது துாக்கத்தில் எழுந்த கனவாகவே இந்த பிரபஞ்சம் உண்டாக்கப்பட்டது. அந்த வேடிக்கை கனவில் தான் உயிர்கள் படைக்கப்பட்டு இயங்கி கொண்டே இருக்கின்றன. அவரது கனவு கலையும் நாளில் உலக இயக்கம் முடிவுக்கு வந்து விடும்.