‘இவன் பெரிய மன்மதனோ’ ‘மனசுக்கு்ளள மன்மதன்னு நெனப்பு’ என்றெல்லாம் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், மன்மதனுக்கும் பெரிய மன்மதனாக இருப்பவர் யார் தெரியுமா.... பகவான் கிருஷ்ணர் தான். ‘ஸாக்ஷாத் மன்மத மன்மதஹ’ என்று சுகபிரம்மம் பாகவதத்தின் ஸ்லோகத்தில் கிருஷ்ணரை போற்றுகிறார். மன்மதன் என்ற சொல்லுக்கு ‘மனதில் தோன்றிய அழகன்’ என்பது பொருள். பேரழகனான மன்மதன், கிருஷ்ணரின் மனதில் இருந்தே பிறந்தான்.