பதிவு செய்த நாள்
03
பிப்
2022
12:02
பழநி: பழநி முருகன் கோயிலின் உப கோவிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடும் விழா நேற்று நடந்தது.இக்கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி பிப். 28- முகூர்த்த கால் நடப்பட்டது.
பிப்.,1 ல் திருக்கம்பம் தயாரிக்க காணியாளர் அரிவாள் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்த மரம் கம்பத்திற்கு தேர்வு செய்து தயார் செய்யப்பட்டது. அதன்பின் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு படிப்பாறை காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அரசமரத்து வினாயகர் கோயில் படித்துறையில் அலங்கரிக்கப்பட்டது.அதன்பின் அதிகாலை மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் கம்பத்திற்கு அபிஷேகம் செய்தனர். வருகிற பிப்., 8 ம்தேதி கொடியேற்றம், பிப்., 15 ம்தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம், பிப். 16 ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.மறுநாள் பிப். 17 ம்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன், துணை ஆகியோர் செந்தில்குமார் செய்து வருகின்றனர்.