ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர் தேர்தல் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் ஆங்காங்குள்ள கோயில்களில் காலையில் குவிந்தனர். ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் 18 வார்டுகளில் தி.மு.க., சார்பில் 16 அதன் ஆதரவுகம்யூ., கட்சிகள் சார்பில் இரண்டு இடங்களில் அ.தி.மு.க., சார்பில் 18 வார்டுகளிலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்பு காலையில் வேட்பாளர்கள் பலரும் தங்களின் ஆதரவாளர்களுடன் ஆங்காங்குள்ள கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு செய்து பணிகளை துவக்கினர்.