கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே கோ.அய்யாட்டியில் சங்கிலி கருப்புசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோம்பைபட்டி ஊராட்சி கோ.அய்யா பட்டியல்யில் புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர், சங்கிலி கருப்பசாமி, வீரசின்னம்மாள், முருகன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது . மேலும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம் கும்பத்தில் ஊற்றப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமடித்தார். இதில் கோம்பைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.