பதிவு செய்த நாள்
04
பிப்
2022
02:02
அனுப்பர்பாளையம்: திருப்பூர் காலேஜ் ரோட்டில் புகழ்பெற்ற கொங்கனகிரி கந்த பெருமான் கோவில் உள்ளது.
கோவிலில், மக்கள் நல அறக்கட்டளை சார்பில், ராஜகோபுரம், கிரிவலபாதை, மின் விளக்கு, கழிப்பிடம், குடிநீர், உள்ளிட்ட அனைத்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது, அமைப்பு சார்பில் கோவில் வளாகத்தில் உள்ள அரை ஏக்கர் காலி இடத்தில் நந்தவனம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் வனம் இந்தியா பவுண்டேசன் தலைவர் சுந்தர்ராஜன், மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, கூறியதாவது : நந்தவனத்தில், அரளி, பவளமல்லி, செம்பருத்தி, ரோஜா, மல்லி, முல்லை, உள்ளிட்ட 16 வகையான பூ செடிகள் வைக்கப்பட உள்ளது. கோவிலுக்கு வேண்டிய மலர்கள் இங்கே கிடைக்கும் வகையில் இந்த நந்தவனம் அமைக்கப்பட உள்ளது. என்றார்.