பதிவு செய்த நாள்
09
பிப்
2022
05:02
பல்லடம்: பல்லடம் அருகே, பிரத்யங்கிரா தேவி கோவில் ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரத்தில் அதர்வண பத்ரகாளி எனப்படும் பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு, 16 அடி உயரத்தில் பிர்தயங்கிரா தேவி அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. காலை, 6.00 மணி முதல் மகா கணபதி பூஜை, ஸ்ரீபிரத்யங்கிரா நவாவர்ண அர்ச்சனை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. மஞ்சள், குங்குமம், ஹோம திரவியங்கள், சமித்துகள், வெண்கடுகு, நெய் உள்ளிட்டவற்றால் பிரத்யங்கிரா தேவிக்கு ஹோமம் நடந்தது. காலை, 7.00 மணிக்கு பிரத்யங்கிரா தேவிக்கு பால்குடம், மற்றும் பூச்சட்டி ஊர்வலம் நடந்தது. விநாயகர், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், மற்றும் பைரவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. தொடர்ந்து, மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தங்க கவச அலங்காரத்துடன், சிம்ம வாகனத்தில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.