பதிவு செய்த நாள்
09
பிப்
2022
05:02
சூலூர்: சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மேற்கு மாகாளியம்மன் திருக்கோவில் பழமையானது. இங்கு, கடந்த, ஜன., 25 ம்தேதி சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. பிப்., 1 ம்தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. தினமும் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று மாலை அம்மை அழைத்தலும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இரவு பண்டார வேஷம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து, அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் கரகம் எடுத்து ஆடி வந்தனர். மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வரும், 12 ம்தேதி அம்மனுக்கு ஊர் அபிஷேகமும், 15ம் தேதி மகாமுனி பூஜையும் நடக்கிறது.