ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 கலச திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2022 09:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக இரண்டாம் திருநாளில் 108 கலச திருமஞ்சனம் சிறப்பாக நடந்தது.
இதனை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் 108 கலசங்களுடன் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் செய்திருந்தனர்.