பழநி மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா: பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2022 01:02
பழநி: பழநி கிழக்குரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் பொதுமக்கள் வருகை அதிகரிப்பதால் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்.
பழநி முருகன் கோவிலின் உப கோவிலான கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி ஜன.28.,ல் மூகூர்த்த கால் நடப்பட்டது. பிப்.,1ல் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. பிப்., 8 கொடியேற்றம் நடைபெற்று கம்பத்தில் பூச்சட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுப்புற கிராம மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பூவோடு எடுத்து வர துவங்கியுள்ளனர். கம்பத்திற்கு பால் தீர்த்தம் அபிஷேகம் செய்து வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்புக்கான போலீசார் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.
இதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்தை சரி செய்யவும், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதால் அவற்றை ஒழுங்கு படுத்தவும் வேண்டும். எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்., 15 அன்று திருக்கல்யாணம் நடைபெறும். பிப் 16ம் தேதி தேரோட்டம் நடைபெற்று பிப்., 17 அன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.