பதிவு செய்த நாள்
12
பிப்
2022
11:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த காடியார் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மன்னாதீஸ்வரர் ஸ்ரீ பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த காடியார் கிராமத்தில் மன்னாதீஸ்வரர் ஸ்ரீ பச்சையம்மன் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜை, அக்னி காரியங்களுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 5:30 மணிக்கு நான்காம் கால பூஜை, நாடி சந்தானம், மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி கிளி கோபுரம், பரிவாரங்களுடன் மூலஸ்தானத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் தர்மகர்த்தாக்கள் சரவணன், காமராஜ், ராஜசேகரன், சுந்தர், சம்பத்ராஜ் மற்றும் விக்னேஷ், அன்பரசன் விழா ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர். ஒன்றிய கவுன்சிலர் தனம் சக்திவேல், ஊராட்சி தலைவர் சரஸ்வதிதேவி பாலாஜி மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.