மன்னார்குடி: செருமங்கலம் அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேக விழா தொடக்கமாக கிராம மக்கள் ஒருங்கிணைந்து முளைப்பாரி மற்றும் யாகசாலைக்கான தீர்த்த கடங்கள் சுமந்து ஊர்வலம் மன்னார்குடியை அடுத்த 17 செருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பிகா சமேத ஓலைகொண்ட அய்யனார் ஆலயம் ஆதியப்பன், தூண்டிக்காரன், முன்னோடியான் ஏனைய பரிகார மும்மூர்த்திகளுக்கும் திங்கள் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கிராமத்தின் பாரம்பரிய வழக்கப்படி விவசாயம் செழித்தோங்க வேண்டியும், அனைவரும் செல்வ செழிப்போடு வாழவேண்டியும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், யாகசாலை பூஜைக்கான தீர்த்த கடங்களை சுமந்து ஊர்வலமாக வலம்வந்து ஆலயத்தை அடைந்தனர். தொடர்ந்து வேத ஆகமபடி முதல்கால யாகசாலை பூஜையினை சிவாச்சாரியார் தொடங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள், கிராம பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.