பதிவு செய்த நாள்
14
பிப்
2022
05:02
தஞ்சாவூர்: மாசிமாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகா நந்தியம்பெருமானுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்ததால், கடந்த, 7ம் தேதி முதல், கோவில்களில், வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. கோவில்கள், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கவில்லை; வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜன.28ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, அரசு அறிவிப்பு வெளியிட்டதால், கோவில்களில் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூரில் பெரியகோவிலில், மாசி மாத பிரதோஷத்தை நந்தியம் பெருமானுக்கு சந்தனம், பால், தயிர். இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு மங்கள வாத்யங்கள் இசைக்க சிவாச்சாரியர்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. கொரோனா விதிமுறை தளர்வு காரணமாக, ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.