குருவாயூர் கிருஷ்ணன் கோவில் திருவிழா: "யானையோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2022 10:02
பாலக்காடு: கேரளா மாநிலம் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் திருவிழா நேற்று கொடியோற்றத்துடன் துவங்கின. முன்னதாக பிற்பகல் மூன்று மணியவில் நடந்த "யானையோட்டத்தில் " ரவிகிருஷ்ணன் வெற்றிபெற்றனர். இனி பத்து நாள் நீண்டு நிற்கும் உற்சவத்தில் மூலவர் எழுந்தருளுவது ரவிகிருஷ்ணன் மீதிருந்தாகும். கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலை தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி இம்முறை மூன்று யானைகள் மட்டுமே "யானையோட்டத்தில் " கலந்து கொள்ள வைத்தனர். "யானையோட்டத்திற்கு" தேவதாஸ், பெரிய விஷ்ணு, ரவிகிருஷ்ணன் ஆகிய தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தனர். பொதுவாக 20க்கும் மேலாக யானைகள் இதில் பங்குகொள்வது வழக்கம். கடும் கட்டுப்பாடுகளும் "யானையோட்டம்" நடந்தனர். நிகழ்ச்சியை காண வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ்-தேவஸ்தான ஊழியர்கள்-சுகாதாரத்துறை களமிறங்கியிருந்தனர். கோவிலில் இருந்து ஓடி வந்த யானை பாகன்கள் கழுத்தில் மணி அறிவித்ததோடு மஞ்சுளால் அருகே போட்டிக்கு தயாராக நின்று கொண்டிருந்தார் மூன்று யானைகளும் கிழக்கு கோபுர நடை நோக்கி ஓடத் துவங்கினர். முதலிடத்தில் ஓடும் ரவிகிருஷ்ணன் சுற்றம்பலத்தை மூன்று முறை வலம் வந்துமூலவரை வணங்கி நின்றனர். அரசின் கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி விழாவை சடங்குகள் மட்டுமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.