ஊர்காவலன் சாமி கோயிலில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2022 10:02
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வில்லியாரேந்தல் ஊர்காவலன் சாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. வில்லியாரேந்தல், வன்னிகோட்டை, செல்லப்பனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் காவல் தெய்வமான ஊர்காவலன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த சில மதங்களாக பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜைகள் கோயில் பூஜாரி அக்னிராஜ் தலைமையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு மதுரை பாலாஜிசர்மா குருக்கள் தலைமையிலான சிவாச்சார்யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். காலை 10 மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வில்லியரேந்தல் கிராமத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.