பதிவு செய்த நாள்
15
பிப்
2022
11:02
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திப்பம்பட்டி பூங்காநகர் சிவசக்தி கோவிலில், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில், சக்தி அம்மன் உடனுறை மலையாண்டீஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில், யோக நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாகாளியம்மன் கோவில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில்களில், பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று மாசி மாத முதல் பிரதோஷபூஜை நடந்தது. மாலை, சுவாமிக்கு, பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து காசிவிஸ்வநாதர் தேவியருடன் தேரில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உடுமலை: பிரதோஷத்தையொட்டி உடுமலை தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேசுவரர் கோவிலில் நேற்று மாலை, சிறப்பு பூஜைகள் நடந்தது. ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், உடுமலை சுற்றுப்புற கோவில்களிலும், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. - நிருபர் குழு -