கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண்கள் பங்கேற்ற கிராம தேவதை காமட்டான் வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் ஆண்டுதோறும், பாரம்பரியமாக காமட்டான் எனும் கிராம தேவதை வழிபாடு நடபெறுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு நடத்தினால், பெண்களுக்கு, திருமண தோஷம் நீக்குதல், தடையின்றி திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.இந்த ஆண்டுக்கான வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. தெருவின் நடுவே காமட்டான் எனும் கிராம தேவதை சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கிராம தேவதை சிலைக்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் பழம், பூ, இனிப்பு, புடவை, ஜாக்கெட் போன்ற பொருள்களை வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.