அரியாங்குப்பம்-அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நாளை 16ம் தேதி நடக்கிறது.அரியாங்குப்பம், சின்ன வீராம்பட்டினம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள உள்ளனர்.அதையொட்டி, கடற்கரையில் கீற்றுகளால் பந்தல் அமைக்கும் பணி நேற்று நடந்தது.