பதிவு செய்த நாள்
16
பிப்
2022
07:02
கடலூர்: திருப்பாதிரிபுலியூர், பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோவிலில் மாசி மகம், பவுர்ணமி தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், வெள்ளி கடற்கரை, தேவனாம் பட்டினத்தில், பிரகன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ பாடலீஸ்வரர் பெருமாள். திருமாணிக்குழி, அம்பு சாட்சி அம்பிகா சமேத வாமனபுரீஸ்வரர், மற்றும், வண்டிப்பாளையம், ஊத்துக்காட்டு மாரியம்மன், தேவனாம்பட்டினம் கடற்கரையில் எழுந்து அருளி, விசேஷ பூஜைகள் நடைபெற்று, அஸ்திர தேவருக்கு மஹா,அபிஷேகம், மாசி பௌர்ணமி, தீர்த்தவாரி விழா சிறப்புடன் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.