திருமங்கலம்: திருமங்கலம் டி.புதுப்பட்டி ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம் நடந்தது.
டி.புதுப்பட்டியில் ஆயிரம் கண்ணுடயாள் கோவில் 47 அடி உயர மகாசக்தி மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புதிதாக அஷ்ட பைரவர்கள் சூழ்ந்துள்ள மண்டபத்தில் சண்டிகேஸ்வரி சிலை, மகா யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உலக நன்மைக்காகவும், கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும் மகா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய யாகசாலை பூஜையில் நவக்கிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி போன்றவை செய்யப்பட்டது. நேற்று மகா சண்டி யாகத்தின் ஒரு பகுதி அந்த தம்பதி பூஜை கன்னி பூஜை, சுமங்கலி பூஜை போன்றவை நடத்தப்பட்டு 16 வகை பழங்கள் 108 வகை பூஜை பொருட்களை கொண்டு நடந்து யாகத்தில் பூர்ணாஹூதி செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.