Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாஸ்து தோஷம் போக்குபவர் மனசே...ரிலாக்ஸ் ப்ளீஸ்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரம்மாண்ட சிவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
04:02


அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க வாகனமான நந்தி முன்புறத்தில் நிற்க, கர்நாடகா உத்தரகன்னடா மாவட்டம் பாட்கால் தாலுகாவில் உள்ள முர்டேஸ்வரா நகரையே மறைத்தபடி கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 123 அடி கொண்ட இவரது சிலை உலகிலேயே 2வது பெரிய சிவன் சிலை. சூரியஒளி  இச்சிலையின் படும் போது ஒளிரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கைலாயத்தில் தவம் செய்த ராவணன் பிராண லிங்கம் ஒன்றை சிவனிடம் பெற்றான். லிங்கத்தை நடுவழியில் எங்கும் கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் இலங்கைக்கு புறப்பட்டான். போகும் வழியில் அன்றாட வழிபாடான சந்தியாவந்தனம் செய்யும் நேரம் நெருங்கியது. அப்போது அங்கு பிரம்மச்சாரி வடிவில் நின்றிருந்த விநாயகரைக் கண்டான். அவரிடம், ‘‘இந்த லிங்கத்தை கையில் வைத்துக் கொள். நான் சந்தியாவந்தனம் முடிக்கும் வரை லிங்கத்தை தரையில் வைத்து விடாதே’’ என்றான் ராவணன். ஆனால் சிவலிங்கத்தின் பாரம் தாங்க முடியாத விநாயகர் மூன்று முறை அழைத்தும் ராவணன் வரவில்லை. உடனே சிவலிங்கத்தை வைத்து விட்டார். ஆத்திரமடைந்த ராவணன்  லிங்கத்தை துாக்கிய வேகத்தில் அது உடைந்து நான்கு இடங்களில் விழுந்தது. அதில் ஒன்று முர்டேஸ்வரா சிவன் கோயிலாகும்.
  திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும் இங்கு சுவாமிக்கு 108 கலச அபிஷேகம் செய்கின்றனர். பக்தர்களை குடும்பத்துடன் அமர வைத்து ‘சர்வதேவ பூஜை’ என்னும் தோஷம் போக்கும் பூஜை நடத்துகின்றனர். இதில் நைவேத்தியமாக எள், நெய், வெல்லம், பச்சைப்பயறு பொடி, ஏலக்காய் சேர்த்த பஞ்ச கஜ்ஜாய பிரசாதம் படைக்கப்படுகிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகர் சன்னதியில் பாக்குப்பூ வைத்து பரிகாரம் செய்கின்றனர். எமபயம் அகல ருத்ராபிஷேகம் செய்கின்றனர்.
இங்கு 20 நிலைகளும், 237.5 அடி உயரமும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இரண்டு அடி உயரத்தில் மூலவர் முர்டேஸ்வரர் இருக்கிறார். கோயில் பின்புறம் 123 அடி உயர சிவன் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் பிரம்மாண்ட சிலையாக இருக்கிறார். எதிரில் ராட்சத நந்தி உள்ளது. கணபதி, ஆஞ்சநேயர், நாகர், சுப்பிரமணியர், நவக்கிரகம், தத்தாத்ரேயர் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: மங்களூரு –  கோவா ரயில் மார்க்கத்தில் 220 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar