மூன்றாம் பிறை தெரியும் நாளில் சந்திரதரிசனம் செய்வர். இதனால், வளமான வாழ்வு உண்டாகும் என்பர். ஆனால், நாலாம்பிறையைப் பார்ப்பது கூடாது என்கிறது சாஸ்திரம். மூன்றாம் பிறையைப் பார்த்தவர்கள் நாலாம் பிறையைப் பார்ப்பதால் தோஷம் ஒன்றும் நேர்வதில்லை. நாலாம் பிறை மிக எளிதாக கண்ணில்பட்டுவிடும். ஒருமுறை கிருஷ்ணர், நாலாம்பிறையைப் பார்த்ததால் பழிச்சொல்லுக்கு ஆளானார். சியமந்தகமணியைத் திருடியதாகப் பழி ஏற்பட்டது. அதைப் போக்கிக் கொள்ள காட்டுக்குச் சென்று ஜாம்பவானோடு போரிட்டு அம்மணியை மீட்டுக் கொண்டு வெற்றியுடன் திரும்பினார். நாலாம்பிறையைப் பார்த்தவர்கள் அத்தோஷம் நீங்குவதற்கு கிருஷ்ணர் சியமந்தமணியை மீட்டுவந்த வரலாற்றை மனதில் நினைத்தால் நிவர்த்தி உண்டாகும்.