மகாபாரதத்தில் பிதாமகர் பீஷ்மரால் சொல்லப்பட்டது சகஸ்ரநாமம். மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பக்தன் சொல்ல பகவானே நேரில் இருந்து கேட்ட பெருமை இதற்குண்டு. கிருஷ்ணரும் இதனைக் கேட்டு உள்ளத்தில் மகிழ்ச்சி அடைகிறார். இதை மாலைநேரத்தில் சொல்வது நன்மை தரும். மற்றநேரத்தில் சொன்னாலும் நன்மையே என்றாலும் மாலைநேரமே விசேஷமானது. மாலை என்பது மனதை மயக்கும் தன்மை கொண்டது. அந்நேரத்தில் இதை ஜெபித்தவர் களின் மனம் தூய்மை பெறும் என்று சாஸ்திரம் கூறுகிறது.