கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திரவுபதி அம்மன் திருகல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த சின்னமுத்தூர் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரவுபதி அம்மன், பஞ்ச பாண்டவர்கள் திருகல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், திரளான பக்கதர்கள் கலந்து கொண்டனர்.