ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நடப்பாண்டுக்கான குண்டம் திருவிழா பிப்., 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், மறுநாள் காலையில் சக்தி கும்பஸ்தாபனம் நடந்தது.நேற்று முன்தினம், திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.பக்தர்கள் அம்மனை வழிபட்டு, மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர். நேற்று, வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.