பழநி: பழநி மலைக் கோவில் உண்டியலில் காணிக்கையாக 2 கோடியே 61 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோவிலில் தைப்பூசத் திருவிழாவுக்கு பின், நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், 871 கிராம் தங்கம், 27 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும், 2 கோடியே 61 லட்சத்து 95 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் 221 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளன. இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பொன்சுவாமிநாதன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், நந்தகுமார், மதுரை துணை ஆணையர் பொன் சுவாமிநாதன் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்றனர்.