பதிவு செய்த நாள்
21
பிப்
2022
10:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், மாசிமகத் தேர்த்திருவிழாவில், தெப்போற்சவம் நடந்தது.
காரமடை அரங்கநாதர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா துவங்கியது. 16ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 17ம் தேதி தேரோட்டமும் நடந்தது. 18ம் தேதி அரங்கநாத பெருமாள், குதிரை வாகனத்தில் எழுந்தருளும், பரிவேட்டை உற்சவம் நடந்தது. 19ம் தேதி இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து, தோலம்பாளையம் சாலையிலுள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை செய்த பின்பு, அலங்காரம் செய்திருந்த, பரிசலில் தெப்போற்சவம் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.