பதிவு செய்த நாள்
25
பிப்
2022
10:02
கோவை : கோவை, ஈஷா யோக மையத்தில், மகா சிவராத்திரி விழா, மார்ச் 1 மாலை, 6:00 மணி முதல் 2ம் தேதி அதிகாலை, 6:00 மணி வரை நடக்கிறது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழா, தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் துவங்கும். லிங்கபைரவி தேவி மகா யாத்திரை, தியானம், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சியும் நடக்க உள்ளது. புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, குறைவான மக்கள் மட்டுமே இவ்விழாவில் நேரில் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடி நேரலையில் பங்கேற்கலாம். Sadhguru Tamil யூ-டியூப் சேனலி-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக, சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை பெறுவதற்கு, 83000 83000 என்ற எண்ணுக்கு, மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன், விபூதி, அபய சூத்ரா, ஆதியோகி படம் அனுப்பி வைக்கப்படும் என, ஈஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.