அப்துல் என்ற சிறுவன் புறா ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தான். தனது நண்பனின் புறாவைப்போல் தனது புறா அழகாக இல்லையே என எண்ணி, புறாவின் இறகுகளை வெட்டினான். இப்படி புறாவை அழகுபடுத்துகிறேன் என்ற பெயரில் அதற்கு தொல்லை கொடுத்தான். நம்மில் பலரும் இப்படித்தான் செயல்படுகிறோம். நம்மை போல பிறர் இல்லாவிட்டால், அவர்கள் சரியா, தவறா என சிந்திப்பதில்லை.. நம் கருத்துக்கு ஏற்ப அவர்களை மாற்றவே முயற்சிக்கிறோம். தன்னிடம் இருந்த புறாவின் அழகை ரசிக்க தவறிய அப்துலை போல, பிறரிடம் உள்ள நல்லதை பார்க்க தவறுகிறோம். இதனால் தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பறவைகள் போல மனிதர்களும் பலவிதம் என்பதை இனியாவது புரிந்து கொள்வோமே!