ஆனந்த விமானத்தில் திருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாள் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2022 05:02
சென்னை: திருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாளின் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று (25ம் தேதி) காலை ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் , உபயநாச்சிமார்களுடன் எழுந்தருளி பெரிய மாட வீதிகளில் சேவை சாதித்தார்.
இன்று காலை 5.30 மணிக்குதிருவிய்மொழி மண்டபத்தில் ஸ்ரீ.பார்தௌதசாரதி பெருமாள் உபாயநாச்சிமார்களுடன் எழுந்தருளிள சூர்ணபொடி அபிஷேகம் செய்யப்பட்டது. அங்கு கூடியிருந்ந பத்தர்கள் அனைவருக்கும் பெருமாளுக்கு அபிஷேகம் ஆன சூர்ணப்பொடி வழங்கப்பட்டது. பின்னர் பத்தர்கள் அனைவருக்கும் பெருமாள் அமுது செய்த சார்க்கரைப் பொங்கலும் வழங்கப்பட்டது. பின்னர் பார்த்தசாரதி பெருமாள் உபயநாச்சிமார்களுடன் மண்டபத்திலிருந்து எழுந்தருளி, கோபுர வாசலின் முன்பகுதியில் இருந்த ஆனந்த விமானத்தில் எழுந்தருளி புறப்பாடு கண்டருளினார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.