முப்பத்து முக்கோடி என்றால் 33 கோடி அல்ல. 33 என்ற எண்ணுக்குப் பிறகு 26 பூஜ்யங்கள் சேர்ப்பது என்ற கருத்து உண்டு. அத்தனை நாட்கள் பூமியில் வாழ்ந்தவன் ராவணன். சிவபக்தனான இவன், சிவதரிசனம் பெறுவதற்காக தன்னுடைய ஒன்பது தலைகளை வெட்டி காணிக்கையாக்கினான். அப்படியும் தரிசனம் கிடைக்காமல் போகவே பத்தாவது தலையையும் வெட்ட முயன்றான். அப்போது சிவன் நேரில் காட்சியளித்தார். அவரிடம் முப்பத்து முக்கோடி நாட்கள் வாழ வேண்டும் என வரம் பெற்றான். அப்படி வாழ்ந்த போது தினமும் ஒரு சிவலிங்கத்தை வடித்து வழிபாடு செய்தான்.