பதிவு செய்த நாள்
26
பிப்
2022
10:02
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 13 நாள் மாசி பெருவிழா மார்ச் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் விழா வரும் மார்ச் 1 தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜையும், இரவு கொடியேற்றமும், சக்தி கரக ஊர்வலமும் நடக்க உள்ளது. 2ம் தேதி 2ம் நாள் விழாவாக காலை 9 மணிக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானக்கொள்ளை நடக்க உள்ளது. இதில் பிரம்ம காபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சியை பாரம்பரிய முறைப்படி செய்ய உள்ளனர். 3ம் தேதி காலை 8 மணிக்கு தங்க நிற மரபல்லக்கில் அம்மன் ஊர்வலமும், இரவு 8 மணிக்கு பெண் பூத வாகனமும், 4ம் தேதி காலை 8 மணிக்கு தங்கநிர மர பல்லக்கும், இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்க உள்ளது. 5ம் தேதி 3 மணிக்கு முக்கிய விழாக்களில் ஒன்றான தீமீதி விழாவும், இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் ஊர்வலமும், 6ம் தேதி காலை 8 மணிக்கு தங்க நிர மரபல்லக்கும், இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் ஊர்வலமும் நடக்க உள்ளது. 7 ம்தேதி முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது. 10ம் தேதி இரவு 10 மணிக்கு தெப்பல் உற்சவமும், 13ம் தேதி காப்பு களைதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், சந்தானம், மேலாளர் மணி, சதீஷ், மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதில் மயானக்கொள்ளை, தீமிதி விழா மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியன்று சென்னை, புதுச்சேரி, கடலுார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளனர்.