ஆரோவில்: ஆரோவில் உதயத்தினத்தையொட்டி போன் பையர் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அருகே அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்க அன்னை மிரா அல்பாசா தலைமையில் 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ல் கட்டுமான பணிகள் துவங்கியது. அதனை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆரோவில் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஆரோவில் நகரம் உருவான 54 ஆம் ஆண்டு விழாவையொட்டி, அதிகாலை 5:15 மணியளவில் ஆரோவில் மாத்ரி மந்திர் எதிரில் உள்ள ஆம்பி தியேட்டரில் போன் பையருடன் கூட்டு தியான (தீ மூட்டப்பட்டு சுற்றி அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவது) நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நடந்தது. இதில் வெளிநாடு- உள்நாடு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கூட்டுத் தியானத்தில் ஈடுபட்டனர்.