திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில் ராஜகோபுரம் முன் நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் உலக அமைதிக்காக இசை விழா நடந்தது. பக்தர்கள் லட்சார்ச்சனை செய்வதற்காக சுவாமி சன்னதி அருகே பூக்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.