மார்க்கண்டேயரின் ஆயுள், 16 ஆண்டுகள் என விதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவருக்குரிய மரண நாள் வந்ததும், எமன் அவரது உயிரைக்கவர்ந்து செல்ல வந்தான். மார்க்கண்டேயர் திருநீறு பூசி, திருக்கடையூரிலுள்ள சிவலிங்கத்தை கட்டியணைத்துக்கொண்டார். ஆனால் எமன் விடுவதாக இல்லை. சிவன் எமனைக்காலால் உதைத்து தள்ளினார். இதன் பின் எமதூதர்களிடம், திருநீறு பூசிய சிவனடியார்களை கண்டால் வணங்கிக் செல்லுங்கள் என எமன் உத்தரவிட்டான். திருநீறுக்கு காப்பு, ராட்சை என்றும் பெயருண்டு. இதற்கு பாதுகாப்பு என்று பொருள். மதுரை சிவபெருமான் மீது திருஞானசம்பந்தர் பாடிய மந்திரமாவது நீறு, திருநீற்றின் பெருமைகளை விளக்குகிறது. சுட்டுவிரல், நடுவில், மோதிர விரல், மூன்றாலும் திருநீரை எடுக்க வேண்டும். கீழே சிந்தாமல் சிவாயநம என்று சொல்லி பூச வேண்டும். இதற்கு பஸ்ம ஸ்நானம் அல்லது திருநீற்றுக்குளியல் என்று பெயர். நீராடி விட்டு நெற்றியில் திருநீறு அணிந்தால் இருமுறை குளித்ததற்கு சமம்.