சித்தலூர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2022 11:03
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் மாசித்திருவிழா சிவராத்திரி தினமான நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவர் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு தர்முகர்த்தாக்கள் கண்ணன், முத்தாம்பாள், மாரிமுத்து, பூசாரிகள் குமார், சுரேஷ், கோவிந்தன், ஏழுமலை நாராயணன் முன்னிலையில் மணிமுக்தா ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு முடிந்து 7:00 மணிக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. வரும் 9 ம் தேதி மயான கொள்ளை திருவிழாவும், அதை தொடர்ந்து 10 ம் தேதி தேர்த்திருவிழாவும் நடக்கிறது.