கலபுரகி: கலபுரகியில், சேடம் சாலையில் அமைந்துள்ள பிரம்மகுமாரி அம்ருதசரோவரா வளாகத்தில், ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு, ருத்ராட்சம், தேங் காய், தானிய வகைகளை பயன்படுத்தி, பிரமாண்ட சிவலிங்கம் உருவாக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு, 25 அடி உயரத்தில் பாக்கு, கரும்பை பயன்படுத்தி, சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 500 கிலோபச்சை பாக்கு, 100 கிலோ உலர்ந்த பாக்குகள், மங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்டன. 100 கிலோ கரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவராத்திரியான நேற்று, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.