மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் : விடிய விடிய நடந்த அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2022 04:03
கம்பம்: கம்பம் பகுதியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கோயில்களில் இரவு முழுவதும் நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்றனர். சுருளி அருவியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிவில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மதியம் அன்னதானம் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது, கோடி லிங்கம் கோயிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.