தஞ்சாக்கூர் தவக் கோல சிவன் கோயிலில் மாசி களரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2022 05:03
மானாமதுரை: மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் தவக்கோலத்தில் உள்ள சிவன் கோயிலில் மாசி களரி விழா நடைபெற்றது.
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் பெருமாள்,ஜெகதீஸ்வரர்-திரிபுர சுந்தரியம்மன்,18 சித்தர்கள், சுப்பிரமணியர் கோயில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் இங்குள்ள தெப்பகுளத்தில் ராகு,கேது பகவானுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகா சிவராத்திரியன்று இக்கோயில் வளாகத்தில் தவக்கோலத்தில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாசி களரி திருவிழாவிற்காக சிவன் சிலைக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகளும், விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.தென்மாவட்டங்களில் எங்கும் இல்லாத வகையில் தஞ்சாக்கூரில் தவக்கோலத்தில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மாசி களரி விழா நடைபெற்றது தொடர்ந்து மானாமதுரை,மதுரை,சிவகங்கை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும், பூஜாரியுமான பாலசுப்ரமணியன் செய்திருந்தார்.